இரு வாரங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் 23 வயது இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய கடிதம்!!

இந்தியாவில் இரண்டு வாரங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜார்கண்டை சேர்ந்தவர் சுதிர்குமார்.

இவர் மகள் நேஹா (23). இவருக்கு வரும் 24ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் காலையில் வீட்டருகில் உள்ள கிணற்றில் நேஹா சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த பொலிசார் சடலத்தை மீட்டனர். இந்த நிலையில் நேஹா எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.

அதில், அப்பா என்னை மன்னித்து விடுங்கள், நான் ஒரு நல்ல மகள் அல்ல. நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சுதிர்குமார் கூறுகையில், நேற்று முன் தினம் நள்ளிரவு 12 மணிக்கு வீட்டிலிருந்து நேஹா திடீரென காணாமல் போனாள். அதிகாலை 4 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் தான் கிணற்றில் சடலத்தை கண்டுபிடித்தோம்.

இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவள் மன அழுத்தத்தில் இருந்தார் என கூறினார். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து நேஹா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.