ஐஸ்வர்யா ராஜேஷின் வாழ்க்கை தடம் புரண்டு 6 வருடங்கள்! காலம் வேகமாக ஓடுகிறது…

தனுஷ், வெற்றிமாறன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தனர். பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்தப் படம், 2 தேசிய விருதுகளை வென்றது.

காக்கா முட்டை’ வெளியாகி தற்போது 6 ஆண்டுகள் ஆகின்றன.

இது தொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது! 6 ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இதே நாளில் ‘காக்கா முட்டை’ வெளியானது.

எப்போதும் என்னுடைய இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும் மிகச்சிறந்த படம். தடைகளை உடைத்து என்னுடைய சினிமா வாழ்க்கையை உயர்த்தியது.

இப்படத்தைக் கொடுத்த இயக்குநர் மணிகண்டன், தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன் ஆகியோருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி”. இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.