குடும்ப தகராறில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

நன்னிலம் அருகே கணவர் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் ஒத்தவீடு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மீரா என்கிற ரஞ்சிதா.

இருவருக்கும் காதல் திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் 4வயதில் ஆண் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் மாமியார் மற்றும் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரஞ்சிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையறிந்து வந்த நன்னிலம் காவல்துறையினர் இவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நன்னிலம் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.