“5 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் வாழ்க்கை”..! அரசியல்வாதி மீது பிரபல நடிகை புகார்..

தன்னுடன் 5 ஆண்டுகளாக திருமணம் செய்யாமலே வாழ்ந்து விட்டு தற்போது திருமணம் குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் பட நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் சசிகுமார் நடித்து வெளியான திரைப்படம் தான் நாடோடிகள்.

இந்த படத்தில் பணக்கார வீட்டு காதலர்கள் கதாபாத்திரத்தில் நடித்த துணை நடிகை தான் சாந்தினி தேவா. இவர் மேலும் சில படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். தற்போது நடிகை சாந்தினி, முன்னாள் அதிமுக அமைச்சரும் ராமநாதபுரம் தொகுதி MLA-வுமான மணிகண்டன் மீது புகார் அளித்துள்ளார்.

மணிகண்டன் குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் சாந்தினி அளித்துள்ள புகாரில், தன்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்தி விட்டு திருமணம் செய்யாமல் மணிகண்டன் தன்னை ஏமாற்றுவதாக கூறியுள்ளார். மேலும், பலமுறை தன் கருவை கலைக்க வைத்து அடித்து துன்புறுத்தியதாகவும்,

திருமணம் குறித்து பேசினால் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை கூலிப்படையை வைத்து கொலை செய்து விடுவதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்டி வருவதாகவும் கூறியுள்ள நடிகை சாந்தினி மணிகண்டன் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.