மணமேடையில் செம குத்தாட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு.. ஒட்டுமொத்த மண்டபமே ஆடிப்போன காட்சி..!

திருமணப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கின்றனர். வழக்கமான திருமண படங்களோடு, இந்த அவுட்டிங் படங்களும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் சேரும்போது கல்யாண ஆல்பமே கிளாஸிக்காக இருக்கும் என்பதாலேயே இப்படி செய்கின்றனர்.

இப்போதெல்லாம் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அண்மையில் கேரளத்தில் மரத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கி ஒரு போட்டோகிராபர் மணமக்களை போட்டோ சூட் செய்யும் படம் இணையத்தில் வைரலானது. சகதியில் இருந்து புரளும் ஜோடி, கேரளத்தில் கட்டிட வேலை செய்வது போல் சூட் செய்யப்பட்ட ஜோடி என போஸ் வெட்டிங் சூட்டாலேயே பேமஸான பல ஜோடிகள் உண்டு. அதையெல்லாம் விட இதில் சம்மந்தமே இல்லாமல் மேடை ஏறி ஆட்டம் போட்டு லைக்ஸ்களைக் குவிக்கும் மணமக்களின் தோழிகளும் உண்டு. இதுவும் அப்படியான ஒரு சம்பவம் தான்!

முன்பெல்லாம் திருமண வீடுகளில் சம்பிரதாயமும், சடங்குகளும் மட்டுமே அதிக அளவில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் கேளிக்கை நிகழ்ச்சிகளாகவும் திருமணங்கள் மிளிரி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் இது. குறித்த இந்த திருமணத்தில் ரிசப்சனுக்கு தயாராகி இருந்தார் கல்யாணப் பொண்ணு. மாப்பிள்ளை வர கொஞ்சம் டைம் ஆகவே, அந்த கேப்பில் மணப்பெண்ணை பலரும் ஆடக் கேட்டனர். உடனே, மலையூர் மம்பட்டியான் படத்தில் இடம்பெற்ற, ‘தொட்டதெல்லாம் தூள் பறக்கும் மம்பட்டியான்’ என்னும் பாடலுக்கு செம ஆட்டம் போட்டார் கல்யாணப் பொண்ணு. இதைப் பார்த்த திருமணத்துக்கு வந்திருந்தோர் அடேங்கப்பா பொண்ணு எவ்வளவு அழகாக ஆடுகிறாள்? என கமெண்ட் செய்தனர். இதோ நீங்களே அந்த வீடியோவைப் பாருங்களேன்..

Leave a Reply

Your email address will not be published.