நடிகர் நாகார்ஜுனா தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா – அட, அவரும் ஒரு நடிகர் தானா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் நாகர்ஜுனா. இவர் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக், தமன்னா உள்ளிட்டோர் கூட்டணியில் வெளிவந்த தோழன் திரைப்படத்தில் நாகர்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இவர் பெரும்பாலும் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தமிழில் ரஜினி எப்படியோ அதே போல் தெலுங்கிலும் இவரும் தற்பொழுது தனது 61 வயதிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து இளம் முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுத்து வருகிறார்.

தற்பொழுது இவர் குழந்தை வைத்திருக்கும் ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அந்த குழந்தை யார் என்று தெரியுமா. நாகார்ஜூனா பல வருடங்களுக்கு முன்பு சுட்டிக்குழந்தை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் சுட்டிகுழந்தை கதாபாத்திரத்தில் ஒரு ஆண்குழந்தை நடித்திருந்தது.

அந்தக் குழந்தை யார் என்ற தகவல் தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆம்,அந்த குழந்தை வேறு யாருமில்லை நாகார்ஜுனாவின் மகன் தான். நாகார்ஜுனாவின் மகனும் தற்போது தெலுங்கில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.