சூப்பர் சிங்கர் அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா? முதன்முறையாக வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் பேராதரவுடன் பல சீசன்கள் கடந்து வெற்றிகரமாக ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் தொகுத்து வழங்கி வரும் மாகாபா, ப்ரியங்கா இருவருக்கும் சின்னத்திரை ரசிகர்களுக்கு எப்போதுமே மிகவும் பிடித்த தொகுப்பாளர்கள் தான். சீசன் 1ல் இருந்து 8 வரை மக்களில் வரவேற்பில் வளர்ந்து வந்துள்ளது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. லாக் டவுன் போட்டதால் இந்த சீசன் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது.

இதில் தற்போது 8வது சீசன் துவங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம், இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் தான். ஆம் விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக மக்களின் ரசனைக் கேட்ப நிகழ்ச்சிகளை இயக்கி வருபவர் தான் விஜய் டிவி நிகழ்ச்சிகளின் இயக்குனர் ரவூபா அவர்கள். பல காலமாக இந்நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார் அனுராதா ஸ்ரீராம்.

எப்போதும் ஜாலியாகவே இருப்பார், மற்றவர்கள் பாடும்போதும் அழகாக ரசிப்பார். தமிழில் வெளியான பாம்பே படத்தில் முதன் முதலில் பின்னணியில் பாடல் பாட துவங்கியவர் அனுராதா ஸ்ரீராம். இதன்பின் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில், பாடி பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராமின் கணவர் ஸ்ரீராம் பரசுராமனின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.