கடலில் அடித்து செல்லப்பட்ட தாய், குழந்தை! உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்!! இறுதியில் நடந்த விபரீதம்!

தென்னிலங்கையில் கடலில் அடித்து செல்லப்பட்ட தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த சிவில் பொறியியலாளர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்துகம, கழுபஹன பிரதேசத்தை சேர்ந்த உதய குமார என்ற 31 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இளைஞன் உதய குமார் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் கெலிமோ கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது சிறு பிள்ளைகள் சிலர் நீரில் அடித்து செல்வதனை அவர் கவனித்துள்ளார். பின்னர் அந்த சிறுவர்களை காப்பாற்றுவதற்காக பெண்கள் சிலர் கடலில் இறங்கியுள்ளனர். இதன் போது குறித்த இளைஞனும் நீரில் இறங்கி பெண்கள் மற்றும் சிறுவர்களை காப்பாற்ற உதவியுள்ளார். இதன் போது திடீரென எழுந்த கடல் அலையில் அந்த இளைஞர் சிக்கி தவித்துள்ளார்.

பின்னர் கடல் சீற்றத்தால் கடல் நீரில் உதய குமார் அடித்து செல்லப்பட்டுள்ளார். அதன் பின்னர் உதய குமாரை தேடிப் பிடித்து அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் உதய குமாரை மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் அப்பகுதியில் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.