கட்டிட தொழில் செய்யும் ஒருவருக்கு ஒன்றை கால் கோடி மதிப்புள்ள தங்க புதையல் கிடைத்துள்ள சம்பவம் இணைய ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மஹாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி உள்ள விதல்நகர் பகுதியில் வசித்து வருபவர் சதாம் சலார் கான்பதான். இவரின் சட்ட விரோதமாக வரலாற்று நாணயங்களை பதுக்கி வைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, போலீசார் அவரின் வீட்டை சோதனை செய்தபோது, அவரது வீட்டில் 216 தங்க நாணயங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், அந்த நாணயங்களை சோதனை செய்தபோது அவை அனைத்தும் கி.பி 1720 முதல் 1750 வரையிலான காலகட்டத்தை சேர்ந்தவை என்றும், ஒரு நாணயத்தின் மதிப்பு அறுபதாயிரம் ரூபாய் முதல் எழுபதாயிரம் ரூபாய் வரை இருக்கும் என்றும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, தற்போதைய ரூபாய் மதிப்பில் கைப்பற்றப்பட்ட மொத்த நாணயங்களின் மதிப்பும் சுமார் ரூபாய் 1.3 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து பதான் பேசியபோது, தான் ஒரு கட்டிய மேஷ்திரி என்றும், சிக்லி பகுதியில் கட்டிய பணி ஒன்றிற்காக பள்ளம் தோண்டியபோது இந்த தங்க புதையல் கிடைத்ததாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இந்த அனைத்து நாணையங்களையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.