சிதைக்கப்பட்ட புத்தர் சிலைகள்.. 20 ஆண்டுகளுக்கு பின் 3டி தொழில்நுட்பத்தின் மூலம் உயிர்த்தெழுந்த அதிசயம்!

ஆப்கானிஸ்தான், பாமியான் பள்ளத்தாக்கில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தலிபான்களால் சிதைக்கப்பட்ட புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டதன் நினைவு நாளை முன்னிட்டு நவீன தொழில்நுட்ப உதவியுடன் உயிர்த்தெழச் செய்யப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானத்தில் உள்ள பாமியான் பள்ளத்தாக்கில், 1500 ஆண்டுகளுக்கு முன் 115 மற்றும் 174அடி உயரத்தில் நின்ற நிலையில் இரண்டு புத்தர் சிலைகள் வடிவமைக்கப்பட்டன.

இந்த சிலைகள், சர்வதேச சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து வந்தன. இவற்றை பாரம்பரிய கலைப் படைப்புக்களாக யுனெஸ்கோ அமைப்பும் அறிவித்தது. இந்த நிலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், மார்ச் 2001ல், தலிபான் பயங்கரவாதிகள் டைனமைட் மூலம் இரண்டு சிலைகளையும் தகர்த்து எறிந்தனர். இதை அடுத்து, சிலைகள் நின்ற இடத்தில், அவை இருந்த குகைகள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், வெறுமையாக உள்ள குகைகளில் மீண்டும் புத்தர் சிலைகளை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கற்சிலைகளை பழைய கலை நுணுக்கத்துடன் படைப்பிக்க முடியாத நிலையில், அதிநவீன 3டி தொழில்நுட்பம் மூலம் புத்தர் சிலைகளை உருவாக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து, பழைய புத்தர் சிலைகளின் புகைப்படங்களை அடிப்படையாக வைத்து 3டி தொழில்நுட்பத்தில் காலியாக உள்ள குகைகளில் புத்தர் சிலைகள் உயிர்தெழச் செய்யப்பட்டுள்ளன. இதோ அந்த அழகிய புத்தர் சிலைகளின் புகைப்படம்

Leave a Reply

Your email address will not be published.