தண்ணீர் குடிக்க கோவிலுக்குள் சென்ற முஸ்லிம் சிறுவன்! மதவாத கும்பலால் நேர்ந்த கொடூரம்! நெஞ்சை பதபதைக்க வைக்கும் காட்சி

இந்தியாவில் கோவிலுக்குள் சென்று தண்ணீர் குடித்த முஸ்லிம் சிறுவனை இந்து மத அமைப்பைச் சேர்ந்த கும்பல் கொடூரமாக தாக்கி அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் காசியாபாத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. சிறுவன் ஒருவன் தண்ணீர் தாகமாக இருந்ததால் அருகில் உள்ள ஒரு கோவிலுக்குள் சென்று தண்ணீர் குடிக்க முயன்றுள்ளான்.

அப்போது கோவிலுக்குள் வந்த நபர்கள் கும்பலாக சேர்ந்து அந்த சிறுவனை யார் என்று விசாரித்துள்ளார். பின்னர் யார் என்பதை அறிந்து அந்த சிறுவனை தாக்கியுள்ளனர். அந்த கும்பல் சமூக வலைதளங்களில் பகிர்ந்த வீடியோவில், இந்து மத அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் வீடியோ எடுக்க மற்றொருவருர் சிறுவனை பிடித்து, உன் பெயர் என்ன என்று கேட்க, அசிப் என சிறுவன் கூறுகிறான்.

உன் தந்தை பெயர் என்ன என கேட்க, அபிப் என சிறுவன் கூறுகிறான். பின்னர் கோவிலுக்குள் எதற்கு சென்றாய் என கேட்க, தண்ணீர் குடிக்கச் சென்றேன் என சிறுவன் கூறிய உடன், அந்த நபர் அவனை சரமாரியாக தாக்குகிறான். மேலும், இந்து மத அமைப்பைச் சேர்ந்த கும்பல் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.