உஜாலா விளம்பரத்தில் நடிகை நயன்தாரா! இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ- இதோ!

தமிழ் திரை நடிகைகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக வளம் வருகிறார் நடிகை நயன்தாரா, எத்தனை நடிகைகள் திரைக்கு வந்தாலும் முதலிடம் தனக்கே என தன் அழகாலும், நடிப்பாலும், திறமையாலும் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருகிறார். ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர்.

சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் என்னவோ காதல் சம்பந்தப்பட்ட படங்களாக நடித்தார். படத்தில் காதல் காட்சிகள், நடனம், சில காமெடி என இப்படியே இருந்தது. பின் சுதாரித்துக் கொண்ட நயன்தாரா நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார். பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளில் நடித்து அதில் வெற்றியும் கண்டார். சமீபத்தில் ஆர் ஜெ பாலாஜியுடன் இணைந்து இவர் நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படம் படமாக்கட்பட்டு வருகிறது. அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நயன்தாரா நடித்த ஒரு விளம்பரத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. உஜாலா விளம்பரத்தில் நயன்தாரா நடித்திருக்கும் வீடியோ இதோ…

 

Leave a Reply

Your email address will not be published.