குக் வித் கோமாளி செப் தாமுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா? விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளாரா..!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சி மட்டுமே மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் ரகளையான இந்த நிகழ்ச்சி முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசனுக்கும் நல்ல வரவேற்பு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் சமையல் மட்டும் இல்லாமல் அதனுடன் சேர்த்து காமெடியும் இருப்பதால் இந்த நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது. அதற்கு மிகவும் முக்கியமான காரணம் கோமாளிகளாக வரும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை உள்ளிட்டோர் தான். அதேபோல் இந்நிகழ்ச்சியில் நடுவராக வரும் தாமு மற்றும் வெங்கடேஷ்பட் அவர்களும் மிகவும் பிரபலம். நிறைய சமையல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விதவிதமாகவும் சமைத்துள்ளார். இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக வந்து கலக்கி வருகிறார்.

இவர் நிகழ்ச்சிகள் செய்யாத தொலைக்காட்சியே இல்லை என்று கூறலாம். இந்த கலையில் தாமு சாதித்து நிறைய விருதுகள் எல்லாம் வாங்கியுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் இணைந்து இவரும் நிறைய காமெடிகள் செய்து வருகிறார். இப்படி மக்களிடம் அதிகம் பிரபலமாகி இருக்கும் தாமு அவர்களின் மனைவியை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். தாமு தனது மனைவியுடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். தாமு மற்றும் அவரது மனைவியின் புகைப்படம் இதோ,

Leave a Reply

Your email address will not be published.