ஒஹோ.. இவங்க தான் நடிகர் ஆர்யாவின் அம்மா , அப்பாவா .? இணையத்தில் வெளியான புகைப்படம் உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. அவர் இறுதியாக நடித்த திரைப்படம் டெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக நடிகர் ஆர்யா மற்றும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில் கேப்டன் திரைப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் போஸ்டரில் விசித்திரமான கொடூர விலங்கு இடம்பெற்று இருப்பதால் சயின்ஸ் பிக்சன் திரில்லர் படமாக வெளியாகும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இந்தத் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வருகின்ற செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட உள்ளது.

இதற்கு டி இமான் இசையமைத்துள்ளார். கேப்டன் திரைப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சிம்ரன், காவியா செட்டி, ஹரிஷ் உத்தமன்,கோகுல் மற்றும் பரத்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இவர் தனது தாய் , தந்தையுடன் இருக்கும் புகைப்படமானது , இணையத்தில் வெளியாகி உள்ளது இதோ அந்த அழகிய புகைப்படம் .,