அட…. என்னம்மா ஜூலி இப்படி மாறிட்ட?…. இணையத்தை தெறிக்க விடும் வைரல் புகைப்படம் இதோ….!!!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ஜூலி. இவர் முதலில் சென்னைமெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார்.

அதன் மூலம்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பல நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றார். இருந்தாலும் தற்போது சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம் வருகிறார். அதனைப் போலவே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தற்போது ஜூலிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் போட்டோ ஷூட் களில் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவ்வகையில் வித்தியாசமான லுக்கில் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் தனது தலை முடியை கலரிங் செய்து வித்தியாசமான லுக்கில் காட்சியளிக்கிறார் ஜூலி.