அடடே நம்ம கீர்த்தி சுரேஷா இது?…. சிறுவயதில் அப்படி ஒரு அழகு…. ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்த புகைப்படம்….!!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது.

தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.  இவர் மகா நடி படத்திற்காக தேசிய விருதும் வாங்கியுள்ளார்.

தற்போது உடல் எடையை சற்று குறைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபத்திய படங்களில் சற்று கிளாமராக நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அவரது அக்காவுடன் சிறுவயதில் எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்து இணையத்தில் அதனை வைரல் ஆக்கி வருகிறார்கள்.