“நாம ஜெயிச்சிட்டோம் மாறா”…. தேசிய விருதுகளை அள்ளிய சூரரைப் போற்று…. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு…..!!!!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சூரரைப் போற்று திரைப்படம் வெளியானது. பல்வேறு எதிர்பார்ப்பிற்கு இடையே ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளியது. இப்படத்தில் நடிகர் சூர்யா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனிடையே நேற்று 68 ஆவது தேசிய விருது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில்  சூரரைப் போற்று சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், திரைக்கதை மற்றும் பின்னணி இசை என ஐந்து விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த திரைப்படம்- சூரரைப் போற்று
சிறந்த நடிகர்- சூர்யா
சிறந்த நடிகை- அபர்ணா பாலமுரளி
சிறந்த பின்னனி இசை- ஜி. வி. பிரகாஷ் குமார்
சிறந்த திரைக்கதை- சுதா கோங்கரா

இதனை கொண்டாடும் விதமாக இயக்குனர் சுதா கொங்கரா அவரின் உதவி இயக்குனர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த வீடியோவில் நாம ஜெயிச்சிட்டோம் மாறா என்று பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…