தென்னிந்திய தமிழ் சினிமாவில் “காதலில் விழுந்தேன்” என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். இதில் நகுல் ஹீரோவாக நடித்திருந்தார் பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர். ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை.
மேலும், நடிகை சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சில்லு கருப்பட்டி” திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக இவர் நடித்த ‘சில்லுக்கருப்பட்டி” திரைப்படம் இவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு களை பெற்று தந்தது.
சமீபத்தில் ட்ரிப், எரியும் கண்ணாடி ஆகிய படங்களில் நடித்துள்ளார் .
இந்நிலையில் நடிகை சுனன்யாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் தேட வைத்துள்ளது , இதனை பார்த்த இவரின் ரசிகர்கள் மிகுந்த குஷியில் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர் .,