‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் நடித்த பிரபல நடிகர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரை பிரபலங்கள்..

தென்னிந்திய மலையாள சினிமாவில் நகைச்சுவை நடிகராக வளம் வந்தவர் கோட்டயம் பிரதீப் ,இவர் தமிழில் 2010 ஆம் ஆண்டு கெளதம் வாசு தேவ மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் ,இதில் தற்போது முன்னணி நடிகராக உள்ள சிம்பு கதாநாயகனாக நடித்திருந்தார் ,

இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்தார் ,இந்த படத்தில் இசைப்புயல் ஏ.ஆர் .ரஹ்மான் இசையமைத்திருந்தார் ,கோட்டயம் பிரதீப் தமிழை விட மலையாள படங்களுக்கே அதிகம் ஆர்வம் காட்டி வந்தார் இவருக்காக ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே கேரளாவில் உள்ளது ,இவர் நேற்று உடல்நல குறைவால் அங்கிருந்த தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் ,

ஆனால் சிகிச்சை பலன் இன்றி FEB 17 ஆம் தேதி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார் ,இவருக்கு வயது 61 ,இவருக்கு ஒரு மகனும் ,ஒரு மகளும் உள்ளனர் இந்த செய்தியை கேட்டு திரையுலகினர் பலரும் அவர்களின் இறங்களின் செய்தியை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர் .,

Leave a Reply

Your email address will not be published.