பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை வைஷாலி தனிகா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வைஷாலி தனிகா கண்கலங்கியவாறு தனது காதலரை திருமணம் செய்துள்ள காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
குறித்த சீரியலிலிருந்து விலகிய அவர் மற்றொரு டிவியில் வேறு சீரியலில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தனது காதலர் சத்யதேவ் என்பவரை திருமணம் செய்துள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
திருமணத்தில் வைஷாலி தனிகா காதலர் தேவ் தன் கழுத்தில் தாலி கட்டியபோது எமோஷனலாகி கண் கலங்கி ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார். இக்காட்சியினை
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளதையடுத்து, ரசிகர்கள் வாழ்த்தக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ