ஆன்லைன் வழியே உங்கள் போனில் இப்படியும் ஒரு மோசடி.. ஒரு நொடியில் உங்கள் பணம் காலி… விழிப்புணர்வு பதிவு.. பகிருங்கள்..!

முன்பெல்லாம் உங்கள் பணம் திருடு போகிறது என்றால் உங்கள் பர்ஸில் கைவைத்தால் தான் முடியும். பேருந்திலோ, கூட நெரிசல் உள்ள திருவிழாக்கடை பக்கமோ இதற்கென்றே பிரத்யேகமாக பிக்பாக்கெட் கொள்ளையர்கள் இருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது.

ondlf

இணைய வழியில் நூதனமான முறையில் நம் பணத்தைக் கொள்ளையடிக்கும் யுத்திகளோடு பலர் இருக்கிறார்கள். இவர்களை போலீஸாரால் கூட நெருங்க முடியவில்லை.

இதேபோல் வட இந்தியாவைச் சேர்ந்த சிலர் இருக்கிறார்கள். நமது பேஸ்புக் அக்கவுண்டைப் போலவே போலியாக கிரியேட் செய்து நம் நண்பர்களிடம் பணம் வசூலித்து விடுகின்றனர்.

இதேபோல் உங்க ஏடிஎம் கார்டு மேலே இருக்கும் நம்பரைச் சொல்லவும் எனவும் நம் பணத்தை உஷார் செய்கின்றனர். இப்போது இந்த திருட்டுக்கும்பல் கூகுள் குரோம் வழியாகவும் புகுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாம் இயல்பாகவே போனையோ, டெஸ்டாப்பையோ பார்த்துக்கொண்டிருக்கும் போது பணத்தை வின் செய்யுங்கள் என ஒரு நோட்டிபிகேசன் காட்டுகிறது.அதை க்ளிக் செய்து உள்ளே சென்றால் நாம் 3473 ரூபாய் வின் செய்திருப்பதாகக் காட்டுகிறது.

எந்த அக்கவுண்ட்டுக்கு பணம் வர வேண்டும் என்பது போல் வரும் கேள்விக்கு நம் அக்கவுண்ட் எண்ணைக் கொடுத்துவிட்டால் அடுத்த ஒரு நொடியில் நம் கணக்கில் இருந்து பணம் போய்விடும்.இதோ இதைத் தெளிவாக விளக்கும் இந்தப் பதிவினைப் பாருங்கள் மக்களே..

Leave a Reply

Your email address will not be published.