ஒரு வயது குழந்தை மாதம் 75 ஆயிரம் சம்பாதிக்கிறது..! எப்படி தெரியுமா? மகிழ்ச்சியுடன் ரகசியத்தை வெளியிட்ட தாய்..

இந்த காலகட்டத்தில் நவீன இணையத்தள வளர்ச்சியில் பலரும் வீட்டில் இருந்தே ஆன்லைனில் பல வேலைகளை செய்து அதன் மூலம் பணம் சம்பாரித்து வருகின்றனர்., அதை எடுத்து தற்போது அதெல்லாம் மாறி பிறக்கும் குழந்தைக்கே பிட்காயின் முதலீடு செய்வதும், யூடியூப் சேனல் தொடங்குவதும் என பலரும் வித்தியாசமான முறையில் ஈடுப்பட்டு பணத்தை சம்பாரித்து வருகின்றனர்.

அதைப்போன்று அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிறந்த குழந்தை தான் பேபி ப்ரிக்ஸ், இந்த ஒரு வயதே ஆன குழந்தைக்கு தாய் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி இருக்கிறார்.

கணக்கை தொடங்கியதில் இருந்தே அந்த குழந்தைக்கு, 31 ஆயிரம் பல்லோவெர்ஸ் வர ஆரம்பித்து விட்டனர், தற்போது அந்த குழந்தைக்கு மட்டும் மாத வருமானமே அமெரிக்கா மதிப்பில் 1000 டாலர் வருகிறதாம், இந்திய மதிப்பில் 75 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து பேசிய குழந்தையின் தாய், பிரிக்ஸ் பிறந்ததில் இருந்தே அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினோம்.

குழந்தையை நாங்கள் சுற்றுலா அழைத்து செல்வதை அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தேன். கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றி வெளிநாட்டு பயணங்கள் செய்வதை தவிர்த்தோம்.

இதனால், குழந்தையின் அனுபவத்தால் பலரும் பின் தொடர்ந்தனர். பிரிக்ஸுடன் பயணம் செய்வதை நிறுத்த வேண்டும் நாங்கள் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை மட்டுமே சுற்றி வரும் இந்த குடும்பம் தற்போது லண்டன் உட்பட மொத்த ஐரோப்பாவையும் சுற்றி பார்க்க ஒரு பயணத்தை திட்டமிட்டு வருகிறார்களாம்.