திடீரென காரை நிறுத்தி பேருந்திற்குள் ஏறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! திகைத்துப்போன பொதுமக்கள். வைரல் வீடியோ

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று தி டீர் ஆய்வுக்காக சென்னை கண்ணகி நகர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் ஏறினார். முதல்வர் பயணிகளுடன் பேசி, நகரின் உள்ளூர் பேருந்துகள் குறித்த அவர்களின் குறைகளையும், கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் பற்றி எப்படி உணர்கிறீர்கள் என்று குறிப்பாகக் பெண் பயணிகளிடம் ஸ்டாலின் கேட்டார். மேலும் பேருந்துகளில் கூடுதல் வசதிகள் தேவையா என்பதையும் கேட்டறிந்தார்.

இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் 400 பக்க தேர்தல் அறிக்கையில் மாநகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணச் சீட்டுகள் என்பது பல தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. அரசுத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து ஓராண்டாக உயர்த்தவும், மகப்பேறு உதவியாக ரூ.24,000,

ஜூன் மாதத்தில், தி.மு.க அரசு நகர்ப்புறங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயண பாஸ்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.