திருமணமாகி 45 வருடமாக குழந்தை இல்லை..! 70-ஆவது வயதில் குழந்தை பெற்றுடுத்த அதிசயம்.. எப்படி தெரியுமா..?

குஜராத் மாநிலத்தின், Mora கிராமத்தை சேர்ந்த தம்பதி Givunben Rabari(70)-Maldhari(75). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 45 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லை. இதனால் இவர்கள் மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளனர். அதன் பின் தங்களுடைய உறவினர்கள் IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை அறிந்து, அதன் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.

இது குறித்து இந்த தம்பதிக்கு உதவிய மருத்துவர் நரேஷ் கூறுகையில், அவர்கள் முதலில் தன்னிடம் வந்த போது, வயதாகிவிட்டதே, குழந்தைகள் இல்லை என்று சொல்கிறீர்களே என்ற போது, அவர்கள் குழந்தை வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்கள் தங்கள் உறவினர்கள் பலர் IVF மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதை கூறினர்.

இது நான் பார்த்த வழக்குகளிலே மிகவும் அரிதான ஒன்றாக அமைந்தது என்று கூறினார்.தற்போது இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. Givunben Rabari தன்னுடைய வயதை நிரூபிக்க தன்னிடம் அடையாள அட்டை எதுவும் இல்லை.

ஆனால் தனக்கு 70 வயது, இது தான் உண்மை என்று உள்ளூர் ஊடக அதிகாரிகளிடம் கூறியுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு இதே இந்தியாவைச் சேர்ந்த மங்கையம்மா யாராமதி என்ற பெண்,

தன்னுடைய 74 வயதில் IVF மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்தார். அது தான் உலகிலே அதிக வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண்மணியாக நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.