வெள்ளத்தில் மனைவி பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் செந்தில்..! இணையத்தை கலக்கும் அழகிய காணொளி

விஜய் தொலைக்காட்சியில் குடும்ப பாங்கான கதைக்களத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு அப்படி பட்ட ஒரு சீரியல் தான் சரவணன் மீனாட்சி தொடர், இந்த தொடரை பற்றி சொல்லவே வேண்டாம். அத்தொடருக்கு அதிகப்படியான தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

.மேலும் அதில் கதாநாயகனாக நடிகர் செந்திலும் மற்றும் கதாநாயகியாக ஸ்ரீஜாவும் நடித்து இருந்தார்கள். சீரியலில் காமெடியிலும், கெத்து காட்டுவதிலும் மாஸாக நடித்து வருபவர் செந்தில். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற சீரியலில்  மாயன் என்ற பெயரில் செந்திலின் கதாபாத்திரத்திற்கு இருக்கும் கெத்தை ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.

தற்போது செந்தில் தனது பிறந்தநாளை மனைவியுடன் சூப்பராக கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது யூடியூப் பக்கத்திலும், மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார்.