மக்களிடத்தில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக பிரபலமாக ஒரு நிகழ்ச்சியாக உள்ளது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி. பிக்பாஸ் ஏற்கனவே 4 சீசன்கள் முடிந்த நிலையில் இப்போது வெற்றிகரமாக 5 வது சீசன் தொடங்கியுள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கி பிக் பாஸ் சீசன் 5 மிகவும் பிரமாண்டமாக துவங்கியது.
இதில் 18 போட்டியாளர்கள் கலந்துகொள்ள, இந்நிலையில் பிக்பாஸ் சீசன் வரலாற்றில் முதன் முதலாக திருநங்கை ஒருவரும் களம் இறங்கினார் சில காரணங்களால் தீடீரென இந்த போட்டியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து தற்போது 17 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்க, இந்த வாரம் முதல் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடந்தது. இதில் பிரியங்கா, நிரூப், ராஜு, அபிஷேக், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, உட்பட 15 போட்டியாளர்களும் நாமினேட் ஆனார்கள்.
இந்நிலையில், மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது அபிஷேக் என்று தகவல் வெளியாகியுள்ளது.