பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவர் தானா.? இணையத்தில் கசிந்த தகவல்

தற்போது ஒவ்வொரு சேனல்களும் தன்னுடைய TRB ரேட்டிங்கை உயர்த்துவதற்காக புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாக்கி கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் தற்போது விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தி வரும் ஒரு நிகழ்ச்சிதான் சர்வைவர் நிகழ்ச்சி ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். அடிப்படை வசதிகள் ஏதுமின்றி காடுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து போட்டியாளர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதே இந்த நிகழ்ச்சியின் மையக்கரு.

இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் அதில் காடர்கள் வேடர்கள் என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு பல்வேறு சவால்கள் கொடுக்கப்படும்.

சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட நிகழ்ச்சி சர்வைவர். இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். காட்டுப்பகுதிக்குள் 90 நாட்கள் வரை வெற்றிபெற்று நீடிக்கும்

‘ஒரு போட்டியாளருக்கு ரூ. 1 கோடி பரிசுத் தொகை என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சர்வைவர் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளராக நடிகை விஜயலட்சுமி, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

 

Leave a Reply

Your email address will not be published.