“உங்கள் கால்ல கூட விழறேன்” வீட்டுக்கு சீல் வைக்காதிங்க.. கெஞ்சிய மதுவந்தி.! சூப்பர்ஸ்டார் ரஜினி உறவினருக்கு இப்படி ஒரு நிலையா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்பவர் Y.G.மகேந்திரன், இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மகள் மதுவந்தி, இவர் நாடகங்கள் மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது பேச்சுக்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் விவாதத்திற்குள் ஆவது வழக்கம்.

இந்நிலையில் இவர் தற்போது புதிய விவகாரத்தில் சிக்கியுள்ளார்.  மதுவந்தி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றியில் கடந்த 2016 ஆம் ஆண்டு வீடு ஒன்றை வாங்கி,

அதில் வசித்து வருகிறார். இந்த வீட்டை வாங்குவதற்காக, சுமார் ஒரு கோடி ரூபாய் பிரபல நிதி நிறுவனம் ஒன்றில் கடனாக பெற்றுள்ளார். வீடு வாங்கிய பின்னர், தவணைகள் சரிவர கட்டாமல் இருந்துள்ளார். இதனால் இவருக்கு வீடு வாங்க பணம் கொடுத்த நிதி நிறுவனம் சார்பில் இவருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

ஆனால் இவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாத நிலையில் அவர்கள் அந்த வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது அதை நீங்களே பாருங்கள் அந்த வீடியோ பதிவு இதோ