புதுக்கோட்டை, கீரனூர் கிராமத்தை சேர்ந்த பாரதி என்பவரும், நாகப்பட்டினம் மாவட்டம் செம்பியன்மாதேவி பகுதியை சேர்ந்த மதன்ராஜ் என்பவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர்.
அப்போது ஏற்பட்ட நட்பு காதலாக மாறவே கடந்த இரண்டு ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் பெண் வீட்டில் கடும் எ தி ர் ப்பு கிளம்பியது.
எனவே இருவரும் பதிவு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக கடந்த 9ம் தேதி திருச்சியில் இருந்து நாகை வந்த இருவரும், நேற்று முன்தினம் பதிவு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதற்கு முன்பாக நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணத்தை முடித்த காதல் ஜோடிகள், வழக்கறிஞர் மூலமாக முறைப்படி பதிவு திருமணம் செய்ய நாகை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
அங்கு பதிவு திருமணம் செய்து இறுதியாக கையெழுத்து போட இருக்கையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ளே நுழைந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள், பெண்ணை வலு கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார்.
இதனைத் தடுக்க வந்த போலிசாரையும் மீறி அழைத்துச்செல்ல முற்பட்ட வேளையில், மக்களின் துணையுடன் போலிசார் சுற்றி வளைத்தனர் . சினிமாவை மிஞ்சிய இக்காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.