நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர். இவர் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது.
நடிகர் விஜய்க்கு சஞ்சய் என ஒரு மகனும் திவ்யா என ஒரு மகளும் உள்ளனர் என்பதை அறிவோம்.சமீபத்தில் பட்டப்படிப்பு விழாவில் சஞ்சய் மற்றும் திவ்யா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி ஆனது
கனடாவில் உயர்க் கல்வி படித்து வந்த நடிகர் விஜய் மகன் சஞ்சய், இவர் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தந்தையுடன் நடித்திருந்தார். . குறும்படம் ஒன்றிலும் நடித்தார். பட்டப் படிப்புக்குப் பிறகு அவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களின் ஒருவரான நிவின் பாலி-யுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது . இதோ அந்த புகைப்படம்..