தற்போது வெள்ளிதிரைகாட்டிலும் சின்னத்திரையில் எத்தனையோ புது புது ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வந்த வண்ணம் உள்ளது. அதிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்சிகளில் எண்ணற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி
மக்கள் மத்தியல் பெரிய அளவில் வர வெற்பை பெற்று வருகின்றனர். அப்படி ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.
அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை எட்டி உள்ளது. கடந்த சில வாரம் குறிப்பிட படாத காரணத்தால் நமீதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15 வது நாளில், அதாவது அக்டோபர் 17 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
முதல் Wildcard என்ட்ரியாக புதிய போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் போக போகிறாராம்.அது யார் என்று எதிர் பார்த்த நிலையில் அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அது வேறு யாருமில்லை நடிகை நடிகை ஷாலு ஷம்மு தானாம், சோஷியல் மீடியாக்களில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வரும் ஷாலு ஷம்மு தான் இப்போது பிக்பாஸ் போட்டியாளராக வீட்டிற்குள் செல்ல போகிறாராம்.