சூரரைப்போற்று படத்தில் அப்துல்கலாம் வாய்ஸில் பேசியது இந்த பிரபலமா..?அவரே வெளியிட்ட புகைப்பட பதிவு!

தமிழ் சினிமாவில் முன்பை விட தற்போதெல்லாம் ஆண்டுக்கு முந்நூறு படங்கலுக்கு மேல் திரையில் வெளிவருகின்றன. வருடத்திற்கு வருடம் முப்பது முதல் ஐம்பது படங்களுக்கு மேலே தரையில் வெளிவருகின்றன ஆனால் யுப்படி வேயாகும் திரைபபடங்கள் அனைத்தும் வெற்றி பெறுகிறதா என்றால் அது கேள்வுக்குரிதான் என்றே சொல்ல வேண்டும் .

முன்பெல்லாம் பெரிய ஹீரோக்களின் பெரிய பட்ஜெட் படங்கள் வெற்றியடைந்த காலம் போய் தற்போது சிறிய பட்ஜெட் படங்களோ அல்லது முகம் தெரியாத நடிகரோ, கதை நன்றாக இருந்ததால் அனைவரும் பார்க்கிறார்கள். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகிய சூரைரைப் போற்று திரைப்படம் அமேசான் ப்ரைமில் 12 தேதி வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தை ப்ல திரைத்துறை சார்ந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் சூர்யாவின் நடிப்பை வெகுவாக பாராட்டி இணையப்பக்கங்களிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் மற்றும் விஜய் மல்லையா போன்றவர்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதை போல் காட்டியிருப்பார்கள்.

அதில், படத்தில் சூர்யாவிடன் அப்துல்கலாம் வாய்ஸில் அச்சு அசலாக பேசியது இடம்பெற்று இருக்கும்.அதற்கு வாய்ஸ் கொடுத்தது யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கலக்கப்போவது யார் மிமிக்ரி ஆர்டிஸ்ட் நவீன் தான் பேசியுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் அவர் பதிவிட்டுள்ள பேஸ்புக் பக்கத்தில் நான் தான் குரல் கொடுத்தேன் என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இதனிடையே, ”உங்களுக்கு நடிக்க தெரியாதுன்னு யாரோ சொன்னாங்க, உண்மைதான். உங்களுக்கு நடிக்க தெரியல, வாழ்ந்து காட்டிட்டீங்க” என அவர் சூர்யாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.