கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் ரசிகர்களை கவர்ந்த நடிகை மாளவிகா மோகனன்.. வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் தற்போது திரைப்படங்களில் தமிழ் நடிகைகளை காட்டிலும் பிரபல மொழிநடிகைகளே பெருமளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதிலும் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட பல நடிகைகள் தான் அதிகளவில் தமிழ் சினிமாவில் நடித்து வருவதோடு முன்னணி நடிகைகளாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பிரபல இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பேட்ட. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் நல்ல பலனை கொடுத்தது.

இந்நிலையில் இந்த படத்தில் சசிகுமார், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம், த்ரிஷா, சிம்ரன், மெகா ஆகாஷ் என முன்னணி நடிகர் பட்டாளமே நடித்து இருந்தார்கள். மேலும் இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் பிரபல நடிகை மாளவிகா மோகனன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

இதன்பின் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான தளபதி விஜய்யுடன் இணைந்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகி நடித்து அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஜோடி போட்டு, கார்த்திக் நரேன் இயக்கி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும், நடிகை மாளவிகா தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வைரலாகும் நடிகை மாளவிகா மோகனன் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.