கோலிவுட் சினிமா துறையில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ அவர்கள்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான தர்மத்தின் தலைவன் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
மேலும் இவர் தமிழ் சினிமா துறையில் மட்டும் தனது நடிப்பை வெளிகட்டமல் இவர் மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற முன்னணி மொழி சினிமா துறைகளில் பணியாற்றி அந்த மொழி சினிமா ரசிகர்கள் தன் வசம் ஈர்த்தார்.மேலும் அந்த மொழியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.
நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவின் 90-களில் முன்னணி நடிகையாக விளங்கியவர், அப்போது இருந்த அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் இவர் ஜோடியாக நடித்துவிட்டார். மேலும் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடிகை குஷ்பூவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் நடிக்கவுள்ள குஷ்பூ தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறியுள்ள புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் தற்போது நடிகை குஷ்பூ அவரின் கணவர் சுந்தர்.சி மற்றும் இருமகள்கள் உடன் இருக்கும் அன்ஸீன் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.