காதல் திருமணம் செய்த பெண் சில மாதங்களில் எடுத்த விபரீத முடிவு: பரிதாப சம்பவத்தின் முழு பின்னணி!!

தமிழகத்தில் காதலித்து திருமணம் செய்த பெண், தற்கொலை செய்து கொண்டதால், அந்த பெண்ணின் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள திப்பனூத்து கிராமத்தினை சேர்ந்த தம்பதி கணேசன் – செண்பகவல்லி. இவர்களுக்கு செண்பகராஜ்(24) என்ற மகன் உள்ளார்.

இவர் எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனத்தில் செயல்பட்டு வரும் தனியார் வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில டிரைவராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன் செண்பகராஜ் கடலையூரில் இருக்கும் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வந்த போது, கடலையூரைச் சேர்ந்த முத்துச்சாமி – மாடத்தி மகள் மகாராணி(26) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவர், பெண் வீட்டார் வயது வித்தியாசம் காரணமாக திருமணத்திற்கு சம்மதிக்காமல் இருந்துள்ளனர். இதனால் இந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டது.

அதன் பின் இவர்களின் காதல் திருமணத்த பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். அதன் பின் நாட்கள் செல்ல செல்ல, இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், இருவருக்கும் உள்ள வயது வித்தியாசத்தினை சிலர் கிண்டல் செய்ய ஆரம்பித்த காரணத்தினால் செண்பகராஜ் வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்போது தான் மகாராணி தன்னுடைய தாய்க்கு போன் செய்து வேதனையுடன் நடந்ததை கூறியுள்ளார். அதன் பின் அவர் இருவரையும், கடலையூருக்கு வந்து அங்குள்ள தங்களுக்கு சொந்தமான வீட்டில் தங்கும் படி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து செண்பகராஜிடம் கூறிய போது , இருவருக்கும் மீண்டும் பிரச்சனை வலுத்துள்ளது. செண்பகராஜ் பெற்றோரும் மகாராணியை திட்டியுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் திப்பனூத்து கிராமத்தில் திருவிழா நடைபெற்றுள்ளது.

செண்பகராஜ் மட்டும் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். மகாராணி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். கடந்த 3-ஆம் திகதி நள்ளிரவு திருவிழாவிற்கு போய் விட்டு செண்பகராஜ் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது மகாராணி இது குறித்து கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் பிரச்சனை எழுந்துள்ளது. உடனே அவர் மனைவியிடம் சத்தம் போட்டுவிட்டு வெளியில் சென்றுள்ளார். ஆனால், மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, செண்பகராணி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கத்தி அழுததால், அருகில் வசிப்பவர்கள் உடனடியாக வந்து இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், திருமணம் ஆன ஒரு வருடத்தில் மகாராணி உயிர் இழந்துள்ளதால் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாரயணனும் விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் தங்களது மகள் உயிரிழப்புக்கு அவரது கணவர் செண்பகராஜ் மற்றும் அவரது பெற்றோர் தான் காரணம் என்று மகாராணி பெற்றோர் எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்றுக்கொண்ட பொலிசார், விசாரணை நடத்தி நேற்று மகாராணியை தற்கொலைக்கு துண்டியதாக அவரது கணவர் செண்பகராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.