தற்போது தமிழ் சின்னத்திரை ஒரு புதிய உச்சத்தையே தொட்டு இருக்கிறது என்றே கூறலாம், புதிய புதிய சீரியல் தொடர்களும், சின்னத்திரை நிகழ்ச்சிகளும் திரைப்படங்களை தாண்டி மக்களிடையே அதிக பிரபலம் அடைந்து வருகிறது. சினிமா நடிகர் நடிகைகளும் தாண்டி தற்போது இந்த சீரியல் நடிகைகளும் நடிகர்களும் மக்களிடையே அதிக புகழ் பெற்று மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. முன்பெல்லாம் பாத்து படங்களில் நடித்தால் கிடைக்காத பெரும் புகழும் கூட தற்போது சின்னத்திரையில் ஒரு தொடரில் நடித்துவிட்டால் கிடைக்கிறது என்பதுதான் உண்மை..
விஜய் தொலைக்காட்சியில் தற்போது முன்னணியில் உள்ள சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.இதில் முக்கியமான தனம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதா.
இவர் இதற்கு முன் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களிலும் நடித்துள்ளார். ஆம் அஜித்தின் வாலி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சின்னத்திரையில் சுஜிதா நடித்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதை க வர்ந்துள்ளது. அந்த வரிசையில் தனம் கதாபாத்திரம் மக்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளது.
நடிகை சுஜிதா, தனுஷ் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் தற்போது அழகிய மகன் உள்ளார்.
இந்நிலையில் நடிகை சுஜிதாவின் திருமண புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த புகைப்படம்..